முக்கிய செய்திகள்

புதுடெல்லி ரோகினி நீதிமன்ற அறையில் திடீர் குண்டு வெடிப்பு

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      இந்தியா
delhi-court 2021 12 09

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் உள்ள அறை எண் 102-க்குள் நேற்று காலை திடீரென குண்டு வெடித்தது. பலத்த சத்தத்துடன் வெடித்ததால், மக்கள் அதிர்ச்சியடைந்து தெறித்து ஓடினர். இதில் ஒருவர் காயமடைந்தார்.

குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையே, குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்ற வழக்கு விசாரணைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மடிக்கணினி வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், இருப்பினும் அதன் உண்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் துணை போலீஸ் கமிஷனர் பிரனாவ் தயால் தெரிவித்துள்ளார். இதேபோல், ரோகினி நீதிமன்ற அறையில் கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் வழக்கறிஞர் வேடமிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து