Idhayam Matrimony

தொடர் விடுமுறை எதிரொலி: குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 28 டிசம்பர் 2025      தமிழகம்
Kurtalam 2024 08 18

தென்காசி, தொடர் விடுமுறை காரணமாக நேற்று குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலத்துக்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் குற்றால அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுந்து வருகிறது. இருந்தபோதும், இங்கு எந்நேரமும் குளுகுளு சூழல் நிலவுகிறது.

தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டுதேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அதனை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் பலரும் சுற்றுலா பகுதிகளை நாடி செல்கின்றனர். அந்த வகையில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வார விடுமுறை என்பதாலும், காலை முதலே சுற்றுலா பயணிகள் திரண்டனர். மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அதேபோல் சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் பலரும் இங்கு வந்து புனித நீராடிவிட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு சென்றதை பார்க்க முடிந்தது. குழந்தைகளுடன் வந்த அவர்கள் அருவிகளில் குளித்துவிட்டு அருவிக்கரைகளில் உள்ள கடைகளில் தேநீர், தின்பண்டங்கள், உணவு வகைகளை வாங்கி ருசித்தனர். இதனால் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து