முக்கிய செய்திகள்

விசாரணை அதிகாரி நியமனம்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      தமிழகம்
connoor-accident 2021 12 09

Source: provided

குன்னூர் : முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது தொடர்பாக வெலிங்டன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிவு 174, இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்த காட்டேரி பகுதி வெலிங்டன் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையிலிருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும்போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் புதன்கிழமை பலியாகினர். ராணுவ கேப்டன் வருண் சிங் பலத்த தீக்காயங்களுடன் உயர்தர சிகிச்சை கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் வெலிங்டன் சதுக்கத்தில் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து நேற்று காலை சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பிறகு அங்கிருந்து விமானம் மூலம் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து