முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு 101 ஆக உயர்வு: மத்திய அரசு தகவல்

வெள்ளிக்கிழமை, 17 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

நாடு முழுவதும் 11 மாநிலங்களில் 101 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் கூறியிருப்பதாவது,

கடந்த 20 நாட்களாக தினசரி கோவிட் பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் பாதிப்படைவோர் விகிதம் 0.65 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையில் கேரளாவில் மட்டும் 40.31 சதவீதம் பேர் உள்ளனர். உலகிலேயே மிக அதிக விகிதத்தில் கோவிட் தடுப்பூசி டோஸ்களை செலுத்திய நாடாக இந்தியா உள்ளது. தினசரி செலுத்தப்படும் டோஸ்களின் வீதம் அமெரிக்காவில் செலுத்தப்படும் டோஸ்களின் வீதத்தை விட 4.8 மடங்கு அதிகமாகவும், இங்கிலாந்தில் செலுத்தப்படும் டோஸ்களின் வீதத்தை விட 12.5 மடங்கு அதிகமாகவும் உள்ளது.

இந்தியா முழுவதும் தகுதியுள்ளவர்களில் 87.6 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இந்தியாவில் 3 லட்சத்திற்கு மேல் தடுப்பூசி மையம் உள்ளது. டெல்டா வைரசை விட ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. மொத்தம் 91 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்தியாவில் 11 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மகராஷ்டிராவில் 32 பேர், டெல்லியில் 22 பேர், ராஜஸ்தானில் 17 பேர், கர்நாடகா, தெலுங்கானாவில் தலா 8 பேர், குஜராத், கேரளாவில் தலா 5 பேர், ஆந்திரா, சண்டிகர், தமிழகம், மேற்குவங்கத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து