முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் 7 பைசா கூட ஊழல் இல்லை : மத்திய அமைச்சர் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

டேராடூன் : பிரதமர் மோடி தலைமையிலான 7 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் 7 பைசா கூட ஊழல் இல்லை என்ற மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

உத்தரகாண்டில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:-

காங்கிரஸ் 2 ஜி, 3 ஜி என பல ஊழல்களை செய்தது. பிரதமர் மோடி தலைமையிலான 7 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் 7 பைசா கூட ஊழல் என்று கூட காங்கிரஸ்காரர்களால் குற்றம்சாட்ட முடியாது. ராகுல் காந்தி முதல் சோனியா காந்தி வரை யாராலும் பிரதமர் மோடியை 7 பைசா கூட ஊழல் செய்தார் என குற்றம் சாட்ட முடியாது. ஊழலற்ற வளர்ச்சி சார்ந்த அரசை நாங்கள் வழங்கி உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து