முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம்: பார்லி. வளாகத்தில் தேசிய கீதம் பாடி போராடிய எதிர்க்கட்சி தலைவர்கள் !

புதன்கிழமை, 22 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன் தேசிய கீதம் பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். அப்போது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் பாராளுமன்ற மரபை மீறி மேஜைகள் மீது ஏறியும், கோஷங்களை எழுப்பியும், கோப்புகளை தூக்கி எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த விவகாரத்தையடுத்து நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அதேவேளை லகிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய இணை மந்திரி அமித்மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடனும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய கீதம் பாடியும், அரசியலமைப்பு சட்டத்தை வாசித்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து