முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு: நெதர்லாந்தில் பேரணி சென்ற மக்களை கைது செய்தது போலீஸ்

திங்கட்கிழமை, 3 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்தில் இதுவரை 33 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பிரதமர் மார்க் ரட்டே ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆம்ஸ்டர்டாமில் இந்த ஊரடங்கு நடவடிக்கைக்கு எதிராக  பேரணியாக சென்ற மக்கள் கண்டன குரலெழுப்பினர். பேரணியை தடுக்க காவலர்கள் முற்பட்டபோது இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதையடுத்து காவலர்களை தாக்கிய நூற்றுக்கு மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து இழுத்துச் சென்றனர். பொதுமுடக்கத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும் நெதர்லாந்து மக்கள், பிரதமர் மார்க் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து