முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கொரோனா கட்டுப்பாடுகளை விதித்த முதல்வர் டாஸ்மாக் கடைகளை மூடாதது ஏன்? - தினகரன் கேள்வி

புதன்கிழமை, 5 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை விதித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் டாஸ்மாக் கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்? என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற முதல்வர் ஸ்டாலின், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்? நோய் பரப்பும் இடங்களாக செயல்படும் டாஸ்மாக் கடைகளையும், மதுபானக் கூடங்களையும் (Bar) மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது.

தேவைப்பட்டால் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கடந்த ஆண்டுகளில் ஸ்டாலின் விடுத்த அறிக்கைகளை அவரே திரும்ப எடுத்து படித்துப் பார்த்து கொள்ளலாம். இவ்வாறு அதில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து