முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறம் சேர்த்த குடல் அப்பளங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளங்களை ஆய்வு செய்ய தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் உணவாக குடல் அப்பளம், வடகம், வத்தல் உள்ளன. நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளன.  தரமற்ற, நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் உள்ளிட்டவற்றை உண்பதால், உடல் உபாதைகள் ஏற்படும்.  வயிற்றுப் புண், நாளடைவில் புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக்குறைவு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

தரமற்ற குடல் அப்பளம், வடகம், வத்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.  தரமற்ற குடல் அப்பளத்தில் Carmoisine, Tartrazine, Sunset yellow, Ponceau 4R உள்ளிட்ட பல நிறமிகள்(Dyes) சேர்க்கப்பட்டுள்ளன. தரம் பற்றிய குறைபாடு குறித்து பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம். [email protected] என்ற இ-மெயில் முகவரியிலும் தரமற்ற உணவு குறித்து புகார் அளிக்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து