முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் கொரோனா தொற்று: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கூடுதல் கவனம்: மாநில சுகாதாரத் துறை அறிவிப்பு

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் கொரோனா உயர்வை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என மானில சுகாதாரத் துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிரடியாக உயர்ந்து வருகின்றன.  தமிழகத்தில் 1,36,620 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981 ஆக உயர்ந்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 8,944, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 37 பேர் என மொத்தம் 8,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்து உள்ளது.

சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் ஒரே நாளில் 700க்கும் மேல் கொரோனா அதிகரித்துள்ளது.  கொரோனாவால் 8 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,833 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 30,817 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கொரோனா பாதித்த மாவட்டங்களின் வரிசையில், செங்கல்பட்டில் 816 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,039 ஆக அதிகரித்துள்ளது.  திருவள்ளூரில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கோவையில் 309 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 408 ஆக அதிகரித்துள்ளது. வேலூரில் 223 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 189 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 121 ஆக உள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரில் 4 பேர் கேரளா, புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்களாவர்.

இந்த நிலையில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என சுகாதார துறை அறிவித்து உள்ளது. இதன்படி, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும், வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும், கோவையிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என சுகாதார துறை அறிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து