முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா விதியை மீறி விருந்தில் பங்கேற்பு: மன்னிப்பு கேட்டார்: இங்கிலாந்து பிரதமர்

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

கொரோனா விதிமுறைகளை மீறி விருந்தில் பங்கேற்றது தவறு என்று ஒப்புக்கொண்ட இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன், மனதார மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது அலுவலக வெளிப்பகுதியில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

போரீஸ் ஜான்சனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. அவருக்கு சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் கீழ் சபையில் போரீஸ் ஜான்சன் பேசினார். 

அப்போது கொரோனா விதிமுறைகளை மீறி விருந்தில் பங்கேற்றது தவறு என்று முதல் முதலாக அவர் ஒப்புக் கொண்டார். அது ஒரு வேலை சம்பந்தமான நிகழ்வு என்று தான் நம்பியதாக அவர் தெரிவித்தார். இதற்காக மனதார மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.  ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து