முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

உ.பி. சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். அயோத்தி அல்லது கோரக்பூர் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயோத்தி தொகுதியில் போட்டியிடுவதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஒப்புதல் கிடைத்துவிட்டது, பாஜக மத்தியக் குழு சம்மதித்தால் ஆதித்யநாத் போட்டியிடுவது உறுதி செய்யப்படும். இல்லாதபட்சத்தில் மட்டுமே ஆதித்யாத் தனது சொந்த ஊரான கோரக்பூரில் போட்டியிடுவார்.

உத்தரப்பிதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து உ.பி.யில் அரசியல் சூடுபிடித்துள்ளது. இதுவரை ஆளும்கட்சியான பாஜகவிலிருந்து 7எம்எல்ஏக்கள் விலகியுள்ளதால், அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்த சூழலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார் உ.பி. அரசியலைப் பொறுத்தவரைகடந்த 18 ஆண்டுகளாக முதல்வராக இருந்த அகிலேஷா யாதவ், மாயாவதி, ஆதித்யநாத் ஆகிய பேருமே மக்களை தேர்தல் களத்தில் சந்தித்து போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகவில்லை. மாறாக உ.பியில் மேல்சபை எம்.எல்.சியாகி அதன் மூலம் முதல்வராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விதிவிலக்காக 2004ம் ஆண்டு கன்னூர் இடைத்தேர்தலில் முலாயம் சிங் யாதவ் போட்டியிட்டு வென்றார். இந்த சூழலில் மக்களைச் சந்தித்து தேர்தலில் போட்டியிட ஆதித்யநாத் தீர்மானித்துள்ளார். அந்த போட்டியிடும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்பதற்காக சங்பரிவாரங்கள் வலுவாக இருக்கும் அயோத்தி தொகுதியையும், தன்னுடைய பிறந்த மண்ணாகிய கோரக்பூரையும் ஆதித்யநாத் தேர்வு செய்துள்ளார்.

அயோத்தியில் ஆதித்யநாத் போட்டியிடுவதற்கு அனைத்து ஒப்புதல்களும் கிடைத்துவிட்டன. பிரதமர் மோடி, அமித் ஷா, ஜேபி நட்டா ஆகியோர் அடங்கிய மத்திய தேர்தல் குழுவினர் ஒப்புதல் கிடைத்தால் உறுதியாகிவிடும். 

உ.பி. அரசியலில் கடந்த 15 ஆண்டுகளாக மாயாவதி (2007-2012) அகிலேஷ் யாதவ் (2012-2017), யோகி ஆதித்யநாத் (2017-2022) ஆகிய 3 பேருமே தேர்தலில் போட்டியிடாமலே எம்எல்சியாகி அதன்மூலம் முதல்வராகினர். இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் த லைவர் மாயாவதி போட்டியிடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல, அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து