Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      விளையாட்டு
India 2023-11-24

Source: provided

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜூன் 20-ல் தொடக்கம்...

ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ம் தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இத்தொடரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்மன்கில் கேப்டனாக....

இஷான்கிஷன், கருண் நாயர், ஆகாஷ்தீப், ஷர்துல் தாக்கூர் போன்ற வீரர்களுக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு அளிக்கப்படலாம். ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடும் தமிழக வீரர் சாய் சுதர்ஷன், ஜெய்ஷ்வால் ஆகியோரும் டெஸ்ட் அணியில் இடம் பெறலாம். சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்படலாம். விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் கே.எல்.ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி வீரர்கள்...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய அணி வீரர்கள் விவரம்:- சுப்மன்கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், ரிஷப்பண்ட், துருவ் ஜூரல், நிதிஷ்குமார் ரெட்டி, ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஹர்சித் ராணா, ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து