Idhayam Matrimony

சவுதி பட்டத்து இளவரசருடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      உலகம்
Trump 2024-02-17

Source: provided

ரியாத் : அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், 4 நாட்கள் அரசு முறை பயணமாக டிரம்ப் நேற்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் ரியாத் வந்த டிரம்பை சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். அதன்பின் டொனால்டு டிரம்பும், முகமதுபின் சல்மானும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். வர்த்தகம், இருநாட்டு உறவு, இஸ்ரேல்-ஹமாஸ் போர், ஈரான் விவகாரம், கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

சவுதி பயணத்தை நிறைவு செய்தப்பின் டிரம்ப் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார். டிரம்பின் மத்திய கிழக்கு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து