எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இஸ்லாமாபாத் : காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை. அனைத்து வடிவங்களிலும் அனைத்து வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை நாங்கள் கண்டித்து வருகிறோம்.
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.
முன்னதாக இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துவோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது. இந்த கருத்தை பாகிஸ்தான் மந்திரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர், அணு ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிடவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து தற்காப்புக்காக தாக்குதல்களைத் தொடங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் வழக்கமான திறன்கள் போதுமான அளவு வலுவாக இருப்பதால், தாக்குதலை வான்வழியாகவும் தரைவழியாகவும் முறியடிப்போம் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். இந்தியாவைத் தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை பாகிஸ்தான் பரிசீலிக்கவில்லை. இந்தியாவின் தாக்குதல்கள் ஒரு போர் ஆகும். நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியா அதன் மேலாதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையிலான நீண்டகால பேச்சு வார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதில் முன்னேற்றம் ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இரு தரப்பினருக்கும் கண்ணியத்தை வழங்கும் நீண்டகால அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பாதையை நிறுவ பாகிஸ்தான் ஆவலுடன் இருக்கிறது. காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை. அனைத்து வடிவங்களிலும் அனைத்து வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை நாங்கள் கண்டித்து வருகிறோம். வரவிருக்கும் பேச்சு வார்த்தைகளில் நீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் போர் நிறுத்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


