எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தை பூசம் என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில், பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும். முருகனுக்கு உகந்த நாள்.
தைப்பூச தினம். தைமாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும்.சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடக ராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க, சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடன் இணைந்த பவுர்ணமியில் நிகழும். இந்தச் சிறப்பு மிக்க தினம் தான் தைப் பூச தினம். இந்த தினம் நாளை 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகிறது.
சிவசக்தி ஜக்கியம் இந்த நாளிலேயே நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்று கூறப்படுகிறது. அதாவது சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகிறது. சிவசக்தி இணைந்த இந்தப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீர், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கிறோம். எனவே உலக இயக்கத்துக்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இந்தத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கிறோம்.
இது வழிவழியாக இந்துக்கள் கைக்கொண்டுவரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகிறது. இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகிறது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள். அந்த அவனாகிய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந்தமையாலேயே உலக இயக்கம், இயற்கையின் அதாவது பஞ்சபூதங்கள் வழியாக நிகழ்கின்றது என்பதை நினைவில் கொள்ள வழிவகுக்கும் நாள் இந்நாள். உலகிலேயே உயிரினங்கள் யாவற்றினதும் தோற்றத்துக்கும் வாழ்வுக்கும் செயல்பாடுகளுக்கும் மறைவுக்கும் இயற்கையே காரணியாக அமைகிறது.
இயற்கையை மீறி எதுவும் செயல்படமுடியாது. அதாவது நம்பிக்கைக்கு மேலான சக்தியாகிய இறைசக்தியை மீறிச் செயற்பட முடியாது. பிறப்புக்கும் இறப்புக்கும் இயற்கையே விதியாக அமைகிறது. இதை வலியுறுத்துவதும் இந்தத்தைப்பூச நன்னாளின் ஒரு அம்சமாகும். தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகிறார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகிறார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராஜப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்த நாளாகவும் தைப்பூசம் விளங்குகிறது.
அத்துடன் வாயு பகவானும், வர்ணபகவானும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்த நாள் போற்றப்படுகிறது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளார் என்பதை உணர்த்தப்பட்ட புண்ணிய நாள் இந்தத் தைப்பூச நன்னாளாகும். சிவனுக்குரிய சிறப்பு மிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத்தைப் பூச நன்னாளானது, முருகப் பெருமானுக்குரிய விசேஷ நாளாகவும் விளங்குகிறது. முருகப் பெருமான் அன்னையிடம் வேல் வாங்கிய திருநாளும் இதுவாக அமைகிறது.
சிவன் அருளினால் தோன்றிய முருகன் அன்னை சக்தியையும் பெற்று சிவசக்தி பேரருள் மிக்கவராக இந்தத் தைப்பூச நாளில் திகழ்வதால் முருகன் கோவில்களில் அபிஷேகம், திருவிழா நிகழ்த்தப்படுகின்றன. முருகனை வேண்டிப் பலர் இந்த நாளில் விரதமிருப்பார்கள். முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்துக்கும் உள்ள இத்தகைய தொடர்பு காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூச நாளில் பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைய தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தில் முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தைப்பூசத்தில் முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தில் காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.
தைப்பூச நன்னாளிலே நம்மை வாட்டிவதைக்கும் துன்ப, துயரங்கள் யாவும் துடைத்தெறியப்பட வேண்டும் என்று நம்மை ஆட்டுவிக்கும் மாபெரும் சக்தியான சிவசக்தியை மனதிருத்தி பிரார்த்தனை செய்வதுடன் வாழ்விலே நலங்கள் சூழ, வாழ்வு சிறக்க வாழவழி கிட்ட வேண்டும் என்று விரதமிருந்து வேண்டுதல் செய்து தொழுகிறோம். இந்தத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும். இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைத்துப் போற்றி வழிபட்டு நீராடுதல் வேண்டும். வாழ்வில் ஒளியேற்றும் தைப்பூச நன்னாள் பல நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகிறது.
தைப்பூச நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். அன்றைய தினம் தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்ய வேண்டும். தைப்பூச நாளில் விரதமிருந்து உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். அல்லது அன்றைய தினம் முழுவதும் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று, சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். நாம் வேண்டும் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும் வல்லமை கொண்டது தைப்பூச விரதம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.