முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2.58 லட்சமாக அதிகரிப்பு: ஒமைக்ரானும் 8,000-ஐ கடந்து பதிவு

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2.58 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கையும் 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் 225 நாட்களில் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 73 லட்சத்து 80 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் தொற்றும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,738 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டதால், ஒட்டுமொத்த பாதிப்பு 8,209 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,738 பேரும்,அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 1672 பேரும், ராஜஸ்தானில் 1276 பேரும், டெல்லியில் 549 பேரும், கர்நாடகாவில் 548 பேரும், கேரளாவில் 536 பேரும் பாதிக்கப்பட்டனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 16 லட்சத்து 56 ஆயிரத்து 341 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் 385 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 86 ஆயிரத்து 451ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இதுவரை 3 கோடியே 52 லட்சத்து 37 ஆயிரத்து 461 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 157.20 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த பாதிப்பில் கொரோனாவில் சிகிச்சையில் இருப்போர் 4.43 சதவீதமாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 94.27 சதவீதமாகவும் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு புதிதாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 964 பேர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து