முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருந்துன்னா இதுதான் விருந்து...! 365 வகை உணவுகளை பொங்கல் விருந்தாக படைத்த ஆந்திர தம்பதி

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

திருப்பதி : ஆந்திராவில் பொங்கல் விருந்தாக மாப்பிள்ளைக்கு 365 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ் இவரது மனைவி மாதவி. தம்பதிக்கு குந்தவி என்ற மகள் உள்ளார். தனுக்கு பட்டணம் தும்மலப்பள்ளியை சேர்ந்த சாய் கிருஷ்ணாவுடன் குந்தவிக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி குந்தவியின் தாத்தா கோவிந்த், பாட்டி நாகமணி ஆகியோர் மாப்பிள்ளை சாய் கிருஷ்ணாவிற்கு விருந்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி விதவிதமான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் தயார் செய்யும் பணி நடந்தது. இதையடுத்து குந்தவி மற்றும் சாய் கிருஷ்ணாவை தங்களது வீட்டிற்கு வரவழைத்தனர்.

அவர்களுக்கு 100 வகையான இனிப்புகள், 30 வகையான காய்கறிகள், 30 வகையான முறுக்கு, எல்லடை, சீடை மற்றும் பழங்கள் என 365 வகையான உணவுகள் தயார் செய்து பரிமாறப்பட்டது. பொங்கல் விருந்தாக மாப்பிள்ளைக்கு 365 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து