Idhayam Matrimony

தடுப்பூசிக்கு எதிரான இயக்கத்தை சேர்ந்த கிராமிய பெண் பாடகி கொரோனாவால் மரணம்

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

தடுப்பூசிக்கு எதிரான இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட செக் குடியரசை சேர்ந்த கிராமிய பெண் பாடகி கொரோனாவால் உயிரிழந்து உள்ளார்.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெண் கிராமிய பாடகி ஹனா ஹொர்கா. 57 வயதான இவர் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான இயக்கங்களால் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால், ஹனா ஹெர்கா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அதே வேளை தடுப்பூசி செலுத்தியிருந்த அவரது கணவர் மற்றும் மகன் ஜென் ரீக் ஆகிய இருவரும்  தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஹனாவிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளனர்.  ஆனால், ஹனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை விட கொரோனா வருவதே மேல் என கூறியுள்ளார். 

இதற்கிடையில், ஹனா ஹொர்காவின் கணவருக்கும், மகன் ரீக்கிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.  ஆனால், ஹனா ஹெர்க்கா தனது கணவர் மற்றும் மகனுடன் எந்த வித பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமல் தொடர்பில் இருந்துள்ளார்.  தனக்கு கொரோனா வந்ததும் அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்து அதன் பின்னர் தியேட்டர் போன்ற பொதுஇடங்களுக்கு செல்லலாம் என அவர் நினைத்துள்ளார்.  

இந்நிலையில், கணவர் மற்றும் மகனை தொடர்ந்து ஹனாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹனாவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய ஹனா கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் உயிரிழந்தார். 

உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹனா தனது சமூகவலை தள பக்கத்தில், நான் குணமடைந்து விட்டேன். இது (கொரோனா) தீவிரமானது. ஆகையால், தற்போது தியேட்டர் செல்வது முக்கியமானது. கடல் பயணம் தற்போது மிகவும் முக்கியம் என பதிவிட்டுள்ளார்.  கொரோனா பாதிப்பால் தனது தாயார் உயிரிழக்க கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பிரசாரமே காரணம் என ஹனாவின் மகன் ரீக் குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனாவை வேண்டுமென்றே வரவைத்த பாடகி ஹனா உயிரிழந்த சம்பவம் செக் குடியரசு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து