முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய, மாநில அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை: தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

மத்திய, மாநில அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

கடந்த 05.01.2022 அன்று சென்னை ஐகோர்ட் வழங்கிய ஆணையின்படி மத்திய, மாநில அரசு சின்னங்களை முன்னாள் நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், பல்வேறு ஆணையங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்கலைக் கழக அதிகாரிகள் மற்றும் பலர் அரசு சின்னங்களை தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்கள், கொடிகள், பெயர் பலகைகள் மற்றும்  கடிதங்களில்  தவறாக பயன்படுத்துவதாக நீதிமன்றத்திற்கு தெரியவந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.

அதன்படி அரசு சின்னங்களை அனுமதியின்றி  தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் காவல்துறையினரால் எடுக்க சட்ட வழி முறைகள் உள்ளன. அரசு விதிகளின்படி, அனுமதிக்கப்பட்ட பதவியில் உள்ள முக்கிய நபர்கள், அதிகாரிகளைத் தவிர மற்றவர்கள் அரசு சின்னங்களை பயன்படுத்தக் கூடாது. ஓய்வு பெற்ற அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகள், அரசு சின்னங்களை தங்கள் வாகனம் முத்திரை, லெட்டர் பேடு மற்றும் விசிட்டிங் கார்டுகளில் பயன்படுத்தக் கூடாது.

இச்சட்டங்கள் மீறப்படும் போது சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாரளிக்கலாம். காவல்துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கலாம். மேலும் வாகனங்களில் பதிவு எண் பலகைகளில் அல்லது வாகனத்தின் வேறுபகுதியில் அரசு சின்னங்கள் மற்றும் பெயர்களை  தவறாக பயன்படுத்துவோர் மீது மத்திய மோட்டார் வாகன விதியின் படி நடவடிக்கை எடுக்க அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதோடு அரசு சின்னத்தை சாட்சிகள் முன்னிலையில் பறிமுதல் செய்யவும் அந்த நிகழ்வினை காணொளி காட்சியாக பதிவு செய்யவும் காவல்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக டி.ஜி.பி. விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து