முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் சாலை பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சாலைப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் பணிகளையும் துவக்கி வைத்தார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கௌதமபுரம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குடிநீர் வசதி செய்து தரும் பணி மற்றும் ஜி.கே.எம். காலனியில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்து,  அசோக் அவென்யூ, ரங்கதாஸ் காலனி மற்றும் அஞ்சுகம் நகர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்கள் பணிகள் மற்றும் தார்சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவஹர் சாலையில் அமைந்துள்ள கௌதமபுரம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி செய்து தரும் வகையில், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வாயிலாக வியாசர்பாடி நீர்நிலை பகிர்மான நிலையத்திலிருந்து ஜவஹர் சாலை வரை 2.8 கி.மீ. தூரத்திற்கு ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகளை  முதல்வர் துவக்கி வைத்தார்.   

அதனைத் தொடர்ந்து, ஜெகநாதன் சாலை மற்றும் அசோக் அவென்யூ பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கிநிற்கும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ. 40 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் பணியினை முதல்வர் துவக்கி வைத்தார். மேலும், ரங்கதாஸ் காலனி மற்றும் நேதாஜி காலனி மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியினை பார்வையிட்டு முதல்வர் ஆய்வு செய்தார். 

இறுதியாக, அஞ்சுகம் நகர் 12-வது தெருவில் தார்சாலை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து,  நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும், விரைவாகவும், தரமாகவும், குறித்த நேரத்திலும் முடித்திட அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். 

இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி,  பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி. விஜயராஜ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து