முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபுதாபி தாக்குதலில் பலியான 2 இந்தியர்களின் உடல்கள் ஒப்படைப்பு

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகர் : அபுதாபி தாக்குதலில் பலியான 2 இந்தியர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 6 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதில் அரசு படைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி விமான நிலையம், அபுதாபியின் முஷாபா நகரில் உள்ள அண்டொக் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள்  டிரோன் தாக்குதல் நடத்தினர். 

இதில், எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 2 இந்தியர்கள், 1 பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், அபுதாபி தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் நேற்று இந்தியா கொண்டுவரப்பட்டு, சொந்த மாநிலமான பஞ்சாப்பில் உள்ள அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதை தொடர்ந்து இரண்டு பேரின் உடல்களும் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து