முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      தமிழகம்
Ajith-Kumar 2025-06-29

Source: provided

திருப்புவனம் : திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த இளைஞர் அஜித்குமார் (வயது 27). இவர் மீது பெண் நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் அளித்தார்.  புகார் தொடர்பாக அஜித்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நகை திருட்டு புகார் தொடர்பாக அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமாரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின்போது அஜித்குமாரை போன்றே நவீன்குமாரையும் போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசார் தன்னையும் தாக்கியதாக நவீன்குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நவீன்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் தாக்கியதில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட வலியால் சிகிச்சைக்காக நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து