எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அகில இந்திய ஆட்சிப் பணி விதிகளை திருத்தம் செய்யும் முடிவினை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954-ல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்றும் இந்த உத்தேச திருத்தங்களுக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து கொள்வதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழ்நிலைக்கு இந்தத் திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசின் வசம் அதிகாரக் குவிப்பிற்கு வழிவகுக்கும் எனவும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பது குறித்த மத்திய அரசின் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்கனவே மாநில அரசுகளில் குறிப்பிட்ட சில முதுநிலைகளில் போதுமான எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. மத்திய குரூப்-I நிலை அலுவலர்கள் மூலமாகவும், வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்களை தேர்வு செய்யும் (Lateral entry) முறை மூலமாகவும் மத்திய அரசு தனது தேவையை நிறைவு செய்து கொள்ளும் சூழ்நிலையில், மாநில அரசு முழுக்க முழுக்க தன்னுடைய நிர்வாகத் தேவைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைச் சார்ந்துள்ளது என்பதை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்குத் தேவையான பல்வேறு மத்திய, மாநில அரசின் திட்டங்களை மாநில அரசுகளே முன்னின்று செயல்படுத்தி வருவதையும், தேசிய பேரிடர்களை எதிர்கொள்ளும் சமயங்களில் போதுமான எண்ணிக்கையில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாநில அரசுகளுக்கு தேவைப்படுவதையும் தனது கடித்ததில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வற்புறுத்துவது, ஏற்கனவே போதுமான எண்ணிக்கைக் குறைபாடுள்ள நிலையில் நிர்வாகத்தில் ஒரு தொய்வுநிலையை ஏற்படுத்திவிடும்.
மேலும், மத்திய அரசு வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்களை தேர்வு செய்திடும் முறை மத்திய அரசு பணிக்குச் செல்ல விரும்பும் அலுவலர்களின் ஆர்வத்தையும் ஏற்கனவே குறைத்துள்ளதை தனது கடிதத்தில் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த புதிய சட்ட திருத்தமானது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தனித்துவம் வாய்ந்த ஒரு அம்சமான அகில இந்திய ஆட்சிப் பணி என்பதனை சேதமடையச் செய்துவிடும் என்பதையும் இந்திய ஆட்சிப் பணி இதுவரை தேசத்திற்குச் சிறப்பான சேவையாற்றி மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இணக்கமான உறவுகளின் மூலம் ஒரு வலுவான கட்டமைப்பாக திகழ்வதையும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவின்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசின் பணிக்கு மாற்றமுடியும் எனும் நிலை இந்தியாவின் எஃகு கட்டமைப்பு என்று அழைக்கப்படும் அரசுப் பணி நிர்வாகத்திற்கு ஒரு நிலையற்ற தன்மையையும், அலுவலர்களிடையே பணி ஆர்வத்தையும் குறைக்குமென்றும் முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்கள். இதனை செயல்படுத்தினால் அகில இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஒரு நிரந்தர அச்ச உணர்வுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்றும், இது தற்போது வளர்ச்சிப் பாதையில் செல்ல விரும்பும் நம்முடைய நாட்டிற்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
குடிமைப்பணி அலுவலர்கள் அரசியல் சார்புத்தன்மை இன்றியும், எவ்வித அச்ச உணர்வின்றியும் பணியாற்ற வேண்டும். ஆனால் உத்தேசிக்கப்பட்ட சட்ட திருத்தங்கள் நிர்வாகக் கட்டமைப்பின் தன்மையையும் அதன் பணியாற்றும் செயல்திறனையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மாநிலங்களில் குடிமைப்பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பதையும் சிக்கலாக்கிவிடும். இவற்றினால் மாநில நிர்வாகமும் அதன் மூலம் தேச நலனும் கூட பாதிக்கப்படக்கூடும் என்பதை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய சட்ட திருத்தத்தின் விளைவுகள் அச்சமூட்டுவதாக உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் அவசரமாக சட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வர முயற்சிப்பது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகவும் எதிரானதாகும். இந்தத் திருத்தத்திற்கு தொடர்புடைய இரண்டு அமைப்புகளான மாநிலஅரசுகளும், நிர்வாக கட்டமைப்பும் இதனை வரவேற்கவில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒரு ஏற்பாட்டினை மாநில அரசுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு எடுத்துக்கொள்வதும் கூட்டாட்சி அரசியல் அமைப்பிற்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார். இது கடந்த 75 ஆண்டுகளாக கவனமாக உருவாக்கப்பட்ட இந்த தேசத்தின் சித்தாந்தங்களை வலுவிழக்கச் செய்யும் என்பதனையும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதனையும் அழிப்பது எளிது ஆனால் மறுகட்டமைப்பு செய்வது கடினமானது என்றும் முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான கட்டுப்படுத்தக்கூடிய புதிய விதிமுறைகளை வகுப்பதற்குப் பதிலாக மாநில அரசுகளின் ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு மத்திய அரசு நேர்மறையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அகில இந்திய ஆட்சிப் பணியாளர்களின் பணி அமைப்பினை மேம்படுத்தவும் அவர்கள் பணியாற்றுவதற்கு சாதகமான சூழலையும் உருவாக்குவதன் மூலம் மத்திய அரசுப் பணிகளுக்கு அவர்கள் தாங்களாகவே எவ்வித வற்புறுத்தலும் இல்லாமல் சென்று பணியாற்றக்கூடிய நிலையினை உருவாக்கலாம். தாங்கள் இது குறித்து மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால், நம்மால் கணிக்க இயலாத விளைவுகளை இது நிச்சயம் ஏற்படுத்தும் எனக் கருதுகிறேன். மேலும் சுதந்திரமான சிந்தனை மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் சேவையாற்றும் ஒரு எஃகு நிர்வாக கட்டமைப்பை உருவாக்க விரும்பிய சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையை நாம் நினைவுகூற வேண்டும் என முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் இந்திய ஆட்சிப் பணி விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாறுதல்களை கைவிடுமாறும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் நிர்வாக கட்டமைப்பு குறித்து நமது முன்னோர்கள் அளித்துள்ள உயரிய சிந்தனையான கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தேசத்தை முன்னெடுத்துச் செல்ல, மாநில அரசுகளோடு கலந்தாலோசனை செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்திய பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
பறந்து போ திரைவிமர்சனம்
07 Jul 2025தனது மகனின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் தான் செல்லாத உயரத்திற்கு தன் மகன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெற்றோரின் கதை தான் இந்த பறந்து போ படம்.
-
பிரத்யேக பேருந்தில் ரோடு ஷோ தொடங்கினார் இ.பி.எஸ்.
07 Jul 2025கோவை : பிரச்சார பயணத்திற்கான பிரத்யேக பேருந்தில் எடப்பாடி பழனிசாமி ரோடு- ஷோ தொடங்கினார்.
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு: ராணா பரபரப்பு வாக்குமூலம்
07 Jul 2025மும்பை : மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கும் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கும் இடையேயான தொடர்பு குறித்து தஹாவூர் ராணா வாக்குமூலம் அளித்துள்ளார்.