முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிவு திட்டமிடப்பட்ட நாடகம் ? ஐஸ்வர்யாவுக்கு ஷாக் கொடுக்கவே நடிகர் தனுஷ் டுவிட்டரில் பதிவு

செவ்வாய்க்கிழமை, 25 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : பிரிவு திட்டமிடப்பட்ட நாடகம் என்றும் ஐஸ்வர்யாவுக்கு ஷாக் கொடுக்கவே நடிகர் தனுஷ் டுவிட்டரில் பிரிவு என்று பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிக்கு தனது மகள்கள் நிம்மதியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்தால் போதும் என்கிற விருப்பம் தான் எப்போதும் உண்டு. சிறிய மகள் சவுந்தர்யா படத்தயாரிப்பில் ஈடுபட்ட போது, தயாரிப்புப் பணிகளைக் கவனிக்கத் தனியாக ஆக்கர் ஸ்டுடியோ என்ற அலுவலகத்தைத் திறந்தார். திரைப்பட பணிகள் தவிர திரை உலக நண்பர்கள் அங்கு ஒன்று சேர ஆரம்பித்தனர்.

முதலில் கதை விவாதங்கள் நடந்தன. பிறகு உற்சாகக் கொண்டாட்டம் நடந்தது. இதனால் சவுந்தர்யா பெரும்பாலும் ஆக்கர் ஸ்டுடியோவில்தான் இருந்தார். இது ரஜினிக்குத் தெரியவர, கண்டிப்புடன் ஆக்கர் ஸ்டுடியோவை மூட உத்தரவிட்டார். ஸ்டுடியோ மூடப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு பொது விழாவில் கலந்து கொண்ட ரஜினி, என் மகள்கள் திருமண வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்தால் போதும், படம் எடுத்து நீங்கள் புதிதாக சம்பாதிக்க வேண்டாம். இருக்கும் பணத்தைக் காப்பாற்றிக் கொண்டால் போதும். எனக்கு ஒரு பேரக் குழந்தையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று மனம் திறந்து பேசினார்.

இந்த பேச்சு நேரடியாக சவுந்தர்யாவைக் கண்டிப்பதாகவே இருந்தது. இதன் பிறகு சவுந்தர்யாவும் தன் போக்கை மாற்றிக் கொண்டு அமைதியானார். இந்த நிலையில் ஐஸ்வர்யா புதிய படவேலையில் இறங்கினார். இதற்காகத் தனி அலுவலகத்தையும் திறந்தார். இவர் ஏற்கனவே 3, வை ராஜா வை போன்ற படங்களை எடுத்திருக்கிறார். 

ஆனால் சில மாதங்களாகவே ஐஸ்வர்யாவின் போக்கும் பழக்கமும் திருப்தியாக இல்லையாம். இந்த தகவல் கேள்விப்பட்டு ரஜினிக்கு மீண்டும் கோபம் ஏற்பட்டது. குடும்பத்தினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி ஐஸ்வர்யாவுக்கு புத்திமதி சொன்னார். ஆனால் ஐஸ்வர்யா கேட்பதாக இல்லை. தனுசும் பாலிவுட் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்க, ஐஸ்வர்யாவுக்கு ஒரு ஷாக் கொடுக்க நினைத்த குடும்பத்தினர் “பிரிவு” என்ற ஒரு முடிவை தனுசை வைத்து அறிவிக்க வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது தனுஷ் மூலம் சிறு பிரிவு நாடகம் நடத்தப்பட்டதாக திரை உலகில் பேசப்படுகிறது. இந்த தகவல் ஐஸ்வர்யாவுக்குப் பெரிய அதிர்ச்சி தகவல் தான்.

இது ஒருபக்கம் இருக்க, தனுஷ் இந்த முடிவை விலக்கிக் கொள்ள திரையுலகினர் பலர் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்கள். தொழில் முறையில் தனுசிற்கு எதிரும் புதிருமாக பார்க்கப்பட்டு வரும் சிம்புகூட இந்த வி‌ஷயத்தில் தனுசை தொடர்பு கொண்டு விவாகரத்து முடிவைக் கைவிடும்படி கூறியிருக்கிறார். இதனால் தனுஷ் மனம் மாறி இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவருக்குமான பிரிவு என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடாது என்கிறார்கள். காரணம் சொத்துக்கள். அவற்றை எல்லாம் மாற்றி எழுதுவதென்பது இப்போதைக்கு முடியாத காரியம் என்கிறார்கள். இந்த வி‌ஷயமும் தனுசின் மனதை மாற்றி இருக்கிறது என்கிறார்கள். இதனால் தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு விரைவில் சுமூக முடிவுக்கு வந்து விடும் என்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து