முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறையும் கொரோனா பாதிப்பு: டெல்லியில் ரத்தாகிறது வார இறுதி ஊரடங்கு !

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

டெல்லியில் வார இறுதி நாட்களில் அமலில் இருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இரவு ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு  கடந்த சில நாட்களாக பாதிப்பு 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இதனால் அங்கு அமலில் உள்ள வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இரவு  ஊரடங்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  டெல்லி அரசுக்கும், கவர்னருக்கும் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது., டெல்லியில் வார இறுதி ஊரடங்கு ரத்து ; இரவு ஊரடங்கு நீடிக்கும். டெல்லியில் 200 பேர் திருமணத்திற்கு அனுமதிபார்கள், உணவகங்கள், தியேட்டர்கள் 50 சதவீத திறனுடன் திறக்கப்படும். பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பள்ளிகள் திறப்பு தொடர்பாக அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து