முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வழிமுறை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை: போடியில் ஓ.பி.எஸ். பேச்சு

வியாழக்கிழமை, 17 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வழிமுறை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்று  தேனி மாவட்டம் போடியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். 

இந்த பிரச்சாரத்தில் அவர் மேலும் பேசியதாவது, 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 505 வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என தி.மு.க. தெரிவித்தது. ஆனால் தற்போது வரை பெரும்பாலான வாக்குறுதிகளை தி.மு.க.வால் நிறைவேற்ற முடியவில்லை.  குறிப்பாக ஆட்சிக்கு வந்தவுடன் எனது முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்காகதான் இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது வீட்டில் இருந்து கொண்டு கையெழுத்து போட்டு வருகிறார்.  தேர்தல் பிரசாரத்துக்கு கூட வராமல் காணொளி மூலம் பிரசாரம் செய்கிறார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வழிமுறை அவருக்கு தெரியவில்லை.

 

விவசாயிகளுக்கு 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக கூறி விட்டு 50 லட்சம் பேரில் 13 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நான் தொகுதிக்கு என்ன செய்தேன்? என்று அமைச்சர் இ.பெரியசாமி கேட்கிறார். நான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன். பொய்யான வாக்குறுதிகளை அளித்ததில் தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். எப்போதும் அ.தி.மு.க. கொடுப்பவர்கள். தி.மு.க. மக்களிடம் இருப்பதை எடுப்பவர்கள். 10 மாத கால தி.மு.க. ஆட்சியில் ஒரு முன்னேற்றம் கூட தமிழகத்தில் ஏற்படவில்லை. யாருடைய ஆட்சிய நல்லாட்சி என்பதை மக்கள் எடைபோட்டு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து