முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.செல்வமணிக்கு பத்திரிக்கையாளர்கள் வாழ்த்து

திங்கட்கிழமை, 7 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் அலுவலர் செந்தில்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன் படி, 2022-24 ஆம் ஆண்டிற்கான திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி, பொதுச் செயலாளராக ஆர்.வி.உதய குமார், பொருளாளராக பேரரசு, இணைச் செயலர்களாக ஏகம்ப வாணன் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர் சி. மேலும், செயற்குழு உறுப்பினர்களாக சரண், ஏ. வெங்கடேஷ், எழில், ரவி மரியா, திருமலை, ரமேஷ் கண்ணாவுடன் மொத்தம் 12 பேர் பதவியேற்றனர். இந்நிலையில், தொடர்ந்து 2வது முறையாக இயக்குனர்கள் சங்கத் தலைவராக பதவியேற்ற ஆர்.கே.செல்வமணியை, 65 ஆண்டு பாரம்பரியம் கொண்ட “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பில் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அதன் தலைவர்- D.R.பாலேஷ்வர், செயலாளர் – R.S.கார்த்திகேயன் , பொருளாளர் – மரிய சேவியர் ஜாஸ்பெல், துணைத்தலைவர் – கலைமாமணி மணவை பொன் மாணிக்கம், இணைச்செயலாளர் – மதிஒளிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து