முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணை தொடர்பான வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

வியாழக்கிழமை, 31 மார்ச் 2022      இந்தியா
Mullai-Periyaru-2022 03 31

முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதா? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாறு ஆற்றில் 1895-ம் ஆண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சனைகள் குறித்த மனுக்கள் மீதான வாதங்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதன்படி, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சில பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்ததையடுத்து, முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கை மார்ச் 31-ம் தேதி நேற்று விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதில், முல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் என்ன? ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன? என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தொடர்பான அனைத்து விவரங்களையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

126 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்புப் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை, கண்காணிப்புக் குழு மூலம் தீர்க்கலாம் என்று தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு மார்ச் 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!