முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1970-ல் நடந்த சம்பவம் - உலகம்மை

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2022      சினிமா
Ulakammai 2022 04 11

Source: provided

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘உலகம்மை.  எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’- என்ற நாவலை தழுவி இயக்குநர் விஜய் பிரகாஷ், ‘உலகம்மை’ என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி என்ற பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். நெல்லையில் 1970-களில் கதை நடக்கிறது. 96 பட புகழ் கவுரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் முன்னணி வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். நடிகர்கள் மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர்,பிரணவ் அருள்மணி, காந்தராஜ், ஜேம்ஸ்,சாமி,ஜெயந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இளையராஜா பாரதிராஜா ஆகியோர் இணைந்து இப்படத்தின் இசையை வெளியிட்டனர். பின்னர் பேசிய படத்தின் இயக்குனர் விஜய் பிரகாஷ், தான் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தனது கல்லூரி நாட்களிலேயே சு சமுத்திரத்தின் “அதுவும் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற நாவல் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, அதையே வைத்து திரைப்படமாக எடுத்துள்ளேன் என்று கூறினார். உலகம்மை என்ற கிராமத்துப் பெண்ணைச் சுற்றி கதை நகர்கிறது. அந்தக் காலத்தில் நிலவிய சாதி அமைப்பை உலகம்மை எப்படி எதிர்க்கிறாள் என்பதை படம் சித்தரிக்கிறது. பாடல் வரிகளை இளையராஜா, முத்துலிங்கம், சரவணன் ஆகியோர் எழுதியுள்ளனர். மே மாதம் உலகம்மை திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து