முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரிசாவில் ரூ.1.5 லட்சத்திற்கு மனைவியை விற்ற கணவர் ! பணம் கொடுத்து வாங்கிய 2 பேர் கைது

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2022      இந்தியா
orisia-2022-04-16

ஒரிசாவைச் சேர்ந்த பெண்ணை சண்டை போட்ட காரணத்திற்காக ரூ.1.5 லட்சத்திற்கு கணவன் விற்றுவிட்டு ஓடிய நிலையில், அப்பெண்ணை பணம் கொடுத்து வாங்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தின் ராம்பூர் கிராமத்தில் சுப்ரியா பிரஜாபதி என்ற பெண் கடத்தப்பட்டு ராஜஸ்தான் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது அதிர வைக்கும் உண்மைகள் தெரியவந்தது. 

அந்த பெண்ணுக்கு ஒரிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்தவருடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பதும் அவருடன் சண்டை போட்டதாக் ரூ.1.5 லட்சத்திற்கு விற்றுவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. அந்த பெண்ணை வாங்கிய மனோஜ் பிரஜாபதி அவரை கட்டாய திருமணம் செய்து ராஜஸ்தான் சென்று கணவன் மனைவியாக வாழலாம் என்று கூட்டிச் செல்லும்போது காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

“நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவே ₹1.5 லட்சம் கொடுத்தேன். அவள் ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்றவள் என்பது எனக்குத் தெரியாது” என்று மனோஜ் பிரஜாபதி கூறியுள்ளார். தற்போது மனோஜை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஜார்சுகுடாவைச் சேர்ந்த ஹ்ருசிகேஷ் சேத்தி, கிரண் சேத்தி மற்றும் டானிஷி ஆகிய மூவரைக் கைது செய்த போலீசார், அடுத்ததாக் கணவனையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து