முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரொனால்டா - கோழி: வைரலான வீடியோ!

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2022      விளையாட்டு
Ronalda 2022 04 18

சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, புதிய போட்டியை சந்திக் வேண்டியது வரும் என  நகைச்சுவை கிராபிக்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கோழி ஒன்று  முட்டையை வைத்து கால்பந்து விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரீமியர் லீக் கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக முன்கள வீரராகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்கு கேப்டனாகவும் இருக்கும் கால்பந்து வீரரான ரொனால்டோ, இந்த கோழியின் திறமையால் ஈர்க்கப்படலாம். 

வீடியோ தெளிவாக நகைச்சுவைக்காக எடிட் செய்யபட்டு உள்ளது  தெரிகிறது. கோழியானது கால்பந்தாட்ட வீரர்களை போல் முட்டைய கால்களால்  உருட்டி, கால்பந்தாட்ட வீரர்களைப் போல துள்ளி விளையாடுவதை வீடியோ காட்டுகிறது.கோழி முட்டையை அதன் முதுகில் எறிந்து அதன் கழுத்து மற்றும் இறக்கைகளில் முட்டையை உருட்டுகிறது.

டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டி: மாதவனின் மகனுக்கு தங்கம்

இந்திய சினிமா நடிகர்களில் ஒருவரான நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன், சிறு வயது முதலே நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து வருகிறார். 16 வயதான அவர் இந்திய நாட்டின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் தொடர்களிலும் பங்கேற்று வருகிறார். தற்போது அவர் டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகன் நகரில் நடைபெறும் டேனிஷ் ஓபன் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

இதே தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் வேதாந்த். இந்தத் தொடரில் அவர் பங்கேற்ற மூன்று பந்தயங்களிலும் அபார திறனை வெளிப்படுத்தி தனது முந்தைய சிறந்த (பெஸ்ட்) டைமிங்கை முறியடித்துள்ளார் அவர். இந்நிலையில், 800 மீட்டர் ஆடவர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் வேதாந்த். 08:17.28 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றுள்ளார் அவர். இதனை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

சி.எஸ்.கே.வை வீடியோ மூலம்  கிண்டலடித்த வாசிம் ஜாபர்

குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும் நிலைக்கு அருகே சென்று தோல்வியடைந்தது. இந்த போட்டியை தொடந்து சென்னை அணியை கிண்டலடிக்கும் விதமாக வீடியோ ஒன்றை முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் பகிர்ந்தார். அதில், சாலையில் செல்லும் ஆண் தன்னை நோக்கி ஒரு பெண் வருவதாக தவறுதலாக கருதி கைகளை நீட்டுகிறார். 

ஆனால் அந்த பெண்ணோ அவருக்கு அருகில் உள்ள ஒருவரிடம் சென்று அணைத்துகொள்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த ஜாபர். இவ்வாறு தான் சென்னை அணியின் வெற்றியை குஜராத் டைடன்ஸ் திருடிக்கொண்டது என கூறியுள்ளார். வழக்கமாக கிரிக்கெட் நிகழ்வுகள் குறித்து நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டு வரும் ஜாபர் சி.எஸ்.கே அணியையும் கலாய்த்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் ஐ.பி.எல் சூதாட்டம் - 9 பேர் கைது

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் ஐபிஎல் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 19 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.   9 பேரும் ஒடிசாவின் பிரமித்ராபூர் தொகுதியில் உள்ள ஜமுனானகி கிராமத்தில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அந்த இடத்தை சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள், இரண்டு மடிக்கணினிகள் மற்றும் ஒரு டேப்லெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரமித்ராபூர் காவல்துறை அதிகாரி மனாஸ் பிரதான் தெரிவித்துள்ளார்.

மறைந்த சகோதரி குறித்து ஹர்ஷல் உருக்கமான பதிவு

நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்ஷல் படேல். இவரது சகோதரி கடந்த 9 ஆம் தேதி மறைந்தார். அதன் காரணமாக தனது குடும்பத்துடன் தன் நேரத்தை செலவிடும் விதமாக ஐபிஎல் பயோ பபுளில் இருந்து வெளியேறினார் ஹர்ஷல் படேல். தற்போது தனது அணியினருடன் மீண்டும் அவர் இணைந்துள்ளார். இந்நிலையில், தனது சகோதரியின் பேரிழப்பை தாங்க முடியாமல் உருக்கமான பதிவின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார் அவர். அதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளது… 

"அக்கா, நம் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் முக்கியமான நபர். கனிவான குணம் படைத்தவர். இறுதி மூச்சு வரையில் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள் அனைத்தையும் மாறா புன்னகையுடன் எதிர்கொண்டீர்கள். இந்தியாவுக்கு நான் விளையாட வருவதற்கு முன்பாக உங்களுடன் இருந்தேன். அப்போது நீங்கள் என்னை விளையாட்டில் கவனம் செலுத்தச் சொன்னீர்கள். உங்களைக் குறித்து கவலை கொள்ளவும் வேண்டாம் எனச் சொன்னீர்கள். உங்களுடைய அந்த வார்த்தைகளுக்காக தான் நான் மீண்டும் களத்திற்கு திரும்பக் காரணம். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிக ரன்களை கொடுத்த சிஎஸ்கே பவுலர் ஜோர்டான் 

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் பந்து வீச்சாளர் ஜோர்டான் 3.5 ஓவர்கள் வீசி, 58 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் அவர் வீசிய மூன்றாவது ஓவரில் மட்டும் 25 ரன்கள் கொடுத்திருந்தார். அந்த ஒரு ஓவர் ஆட்டத்தின் முடிவையே மாற்றி அமைத்தது எனவும் சொல்லலாம்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான ஜோர்டானை சென்னை அணி 3.60 கோடி ரூபாய்க்கு கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் வாங்கியிருந்தது. இதே சீசனில் சென்னை அணியின் மற்றொரு பவுலரான முகேஷ் சவுத்ரி, 4 ஓவர்கள் வீசி 52 ரன்களை இதற்கு முன்னதாக ஒரு போட்டியில் விட்டுக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 22-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து