முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 5 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2022      உலகம்
nilakari surangam 2022 -04-28

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தானில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 5 பேரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்து கொன்று விட்டு தப்பியோடி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நடந்து வந்த நீண்டகால போர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் முடிவுக்கு வந்தது.  அமெரிக்க படைகளின் வாபசை தொடர்ந்து, தலிபான் பயங்கரவாதிகளின் கைவசம் ஆட்சி சென்றது. எனினும், பயங்கரவாத செயல்களில் இருந்து விலகி பொதுமக்களுக்கு உரிய நல்ல ஆட்சியை வழங்குவோம் என தலிபான்கள் கூறி வந்தனர்.  ஆனால், தலிபான்களுக்கு அஞ்சி அந்நாட்டு மக்களில் பலர் வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் எல்லையையொட்டிய சமங்கன் மாகாணத்தில் டாரா-இ-சொப் மாவட்டத்தில் கொத்தல் ரெகி பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த பகுதிக்கு வந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் தொழிலாளர்களை மிரட்டி அவர்களது உடைமைகளை கொள்ளையடித்தனர்.  இதன்பின் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடி விட்டனர். இதில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.  அவர்கள் அனைவரும் அந்த மாவட்டத்தில் வசித்து வருபவர்கள்.  இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்க முன்வரவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து