முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் சற்று குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      இந்தியா
India-Corona 2022 01 04

Source: provided

புது டெல்லி, : இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று சற்று குறைந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து  மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில்,

காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 79 ஆயிரத்து 188 ஆக உயர்ந்தது.  கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 2,876 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 36 ஆயிரத்து 253 ஆக உயர்ந்தது. தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19,092 ஆக உயர்ந்துள்ளது.  நாடு முழுவதும் இதுவரை 189 கோடியே 17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் நேற்று முன்தினம் 25,95,267 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

   கடந்த 26-ம் தேதி பாதிப்பு 2,483 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 4 நாட்கள் பாதிப்பு உயர்ந்து நேற்று முன்தினம் 3,688 ஆக இருந்தது. இந்தநிலையில், நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 79 ஆயிரத்து 188 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து