முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழா மேடையில் இயக்குனருக்கு அட்வான்ஸ் கொடுத்த எஸ்.தாணு

திங்கட்கிழமை, 2 மே 2022      சினிமா
GV-Prakash 2022 05 02

Source: provided

கலைப்புலி எஸ்.தாணு வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். விழாவில் பேசிய கலைப்புலி எஸ்.தாணு, ‘செல்ஃபி என்ற தலைப்பை வைத்து மதிமாறன் என்கிட்ட ஒப்புதல் கேட்டதும் சரி என்றேன். இந்தப்படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தொழில் பக்தி இருந்தது. எனக்கு மதிமாறனை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப்படத்தை நான் எடுக்கணும்னு நினைச்சேன் தம்பிகள் கேட்டதும் சரி தயாரிங்க என்றேன். வெறும் 38 நாட்களில் இந்தப்படத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்ததிற்கு மதிமாறனை நிறைய சொல்லலாம். வி.கிரியேஷன்ஸ் சார்பாக மதிமாறன் ஒருபடம் பண்ணணும். அதற்கு நான் இப்பவே ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு தனது பாக்கெட்டிலிருந்த 10 லட்சத்துக்கான காசோலையை எடுத்து மதிமாறனிடம் கொடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!