முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் சரண்

திங்கட்கிழமை, 2 மே 2022      இந்தியா
Maoist 2022 05 02

Source: provided

கலஹந்தி : தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் போலீஸில் சரணடைந்தார்.

ஒடிசா மாநிலம் கலஹந்தி மாவட்டத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் சரணடைந்தார். லல்ஸூ, சேந்து, லக்‌ஷ்மன் அப்கா என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட அவர் சத்தீஸ்கர் பிஜாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 2009ம் ஆண்டு தனது 17 வயதில் அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். 

பின் 2016, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போலீஸாருடனான துப்பாக்கி சூட்டில் அவர் பங்குபெற்றிருந்தார். இவரது தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதியையும் அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மாவோயிஸ்ட் தலைவர் சரணடைந்தார். இவரிடம் போலீசார் சிறப்பு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் ஒடிசா மாநில அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின்படி, அவருக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். அவருக்கு வீட்டு மனை மட்டுமின்றி கட்டிட உதவி, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை மாதம் ரூ.3,000 மற்றும் தொழில் பயிற்சியுடன் ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என டிஐஜி தெரிவித்தார். மேலும் சரணடைந்தவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடந்த 6 ஆண்டுகளில் சரணடைந்த ஏழு மாவோயிஸ்ட் வீரர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து