முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சருக்கு கொரோனா

வியாழக்கிழமை, 5 மே 2022      உலகம்
Anthony-Blingen-2022-05-05

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுக்கு லேசான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்  வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்டனி பிளிங்கன் புதன்கிழமை பிற்பகல் பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் ஆன்டனி பிளிங்கன் ஏற்கனவே முழுமையான தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொண்டு உள்ளதால் பெரிய அளவு பாதிப்பு இல்லை.  லேசான அறிகுறிகளை மட்டுமே அனுபவித்து வருகிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு லேசான அறிகுறியே காணப்படுவதால் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வந்து தனது பணிகள் மற்றும் பயணங்களைத் தொடருவார் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே வெளியுறவுத் துறை பணியாளர்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கும் உலகம் முழுவதும் முன்னுதாரணமாக விளங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு ஆன்டனி பிளிங்கன் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சில வாரங்கள் மற்றும் மாதங்களில் கரோனா தொற்று பாதித்த பல உயரதிகாரிகள் பட்டியலில் பிளிங்கனும் இணைந்துள்ளார். கடந்த மாதம் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார், மார்ச் மாதம், வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலாளர் சாகி தொற்றால் பாதிக்கப்பட்டார், இரண்டாவது முறையாக தொற்று உறுதியானதை அடுத்து அதிபர் ஜோ பைடனுடனான பெல்ஜியம் மற்றும் போலந்துக்கு பயணத்துக்கான தனது திட்டத்தை ரத்து செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து