Idhayam Matrimony

வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      இந்தியா      அரசியல்
Central-government 2021 12-

புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வருகிற ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் கூட்டத்தொடர் நடக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக வருகிற ஜூலை 19 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ அறிவித்துள்ளார். மேலும் அனைத்துக் கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து அதுதொடர்பாக விவாதிக்க சிறப்பு பாராளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டு முன்னதாகவே(ஜூன் 4) அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து