Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்

புதன்கிழமை, 2 ஜூலை 2025      விளையாட்டு
Women s-team 2024 08 05

Source: provided

லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெத்வதேவ்... 

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர், இத்தாலியின் மேட்டியோ பிரெட்டேனி, டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, கிரீசின் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரென்சோ முசெட்டி உள்ளிட்ட பலர் முதல் சுற்றில் வெளியேறினர்.

தரவரிசையில்.... 

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 2 வீராங்கனையும், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் பட்டம் வென்றவரான அமெரிக்காவைச் சேரந்த கோகோ காப் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார். தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சீனாவின் குயின்வென் ஜெங், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர், பெலாரசின் விக்டோரியா அசரென்கா உள்பட பலர் முதல் சுற்றில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினர்.

ஜோகோவிச் முன்னற்றம்...

இதற்கிடையே 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரும், உலகின் 6-ம் நிலை வீரருமான செர்பியாவின் ஜோகோவிச் முதல் சுற்றில் பிரான்சை சேர்ந்த அலெக்சாண்டர் முல்லரை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-1, 6-7 (7-9), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியைப் பெற அவருக்கு 3 மணி 19 நிமிடங்கள் தேவைப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து