Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: வியன்னாவில் நிறுத்தி வைப்பு

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      இந்தியா
Air-India

புதுடெல்லி, டெல்லியில் இருந்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் புறப்படு சென்றது. இந்த விமானம் வழக்கமாக ஆஸ்திரியாவின் வியன்னாவில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்படும். அந்த வகையில், வியன்னா விமானநிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். ஆனால் சரி செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனால், விமானம் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வியன்னாவில் இறக்கிவிடப்பட்டனர். விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமான நிர்வாகம் அறிவித்தது. நடு வழியில் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சில மணி நேரம் கழித்து, பயணிகள் அனைவருக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் அனுப்பி வைக்கப்பட்டனர். பயணத்தை தொடர விரும்பாத பயணிகளுக்கு முழுக்கட்டணமும் திருப்பி அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து