முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 22-ல் தருமபுரத்தில் சந்திப்போம் : டுவிட்டரில் அண்ணாமலை தகவல்

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      தமிழகம்
Annamalai 2022 05 06

Source: provided

சென்னை : தமிழ் பண்பாட்டை சுமப்போம், மே 22-ல் தருமபுரத்தில் சந்திப்போம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பை அடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

எட்டு வயது சம்பந்தரை எண்பது வயது நாவுக்கரசர் சுமந்தார். பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன். தமிழ் பண்பாட்டை சுமப்போம். மே 22-ல் தருமபுரத்தில் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து