முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி அணியில் ஒருவருக்கு கொரோனா: பிரித்வி ஷா மருத்துவமனையில் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      விளையாட்டு
Prithvi-Sha 2022 05 08

Source: provided

மும்பை : டெல்லி அணியில் ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் டெல்லி வீரர் பிரித்வி ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

55-லீக் ஆட்டம்...

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில்  டோனி  தலைமையிலான சென்னை  அணியும் ரிஷப்  தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

கொரோனா உறுதி...

ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் காலையில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும். அந்த வகையில் டெல்லி அணியில் நேற்று காலை நெட் பௌலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அணியில் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மருத்துவமனையில்...

இருப்பினும் நேற்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உறுதி செய்துள்ள அவர் " தான் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் காய்ச்சலில் இருந்து குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பங்கேற்கவில்லை...

இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறித்த தகவல்கள் இல்லை. சாதாரண காய்ச்சல் காரணமாகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரித்வி ஷா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நேற்றைய போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து