முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் விதிமுறை விரைவில் அரசால் வெளியிடப்படும் : தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா பேட்டி

சனிக்கிழமை, 14 மே 2022      இந்தியா
Sushil-Chandra 2022-05-14

Source: provided

புதுடெல்லி : வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் விதிமுறை விரைவில் அரசால் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ள தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா, தகுந்த காரணங்கள் இருந்தால் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க தேவையில்லை என்றார்.

தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா இன்றுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். கொரோனா தொற்றின் போது உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் மற்றும் பல்வேறு இடைத்தேர்தல்களை நடத்துவது கடினமான சாவாலாக அமைந்தது என்றார். மேலும், ஐந்து மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தியதற்கு தேர்தல் ஆணையமே முக்கிய காரணம் என்றார்.

தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா கூறியதாவது., “தான் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில் இரண்டு முக்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கு ஒரு வருடத்திற்கு ஒரு நாள் என்பதற்கு பதிலாக வாக்காளர்களாக சேர்ப்பதற்கு ஒரு வருடத்தில் நான்கு தேதிகளில் வழங்குதல், மற்றும் வாக்காளர் பட்டியலில் நகல் உள்ளீடுகளை சரிபார்க்க வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பது. இந்த  இரண்டு முக்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சீர்திருத்தம் கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. அதன்படி, ஜனவரி 2 அல்லது அதற்குப் பிறகு 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய ஓராண்டு வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இப்போது இந்த சீர்திருத்தத்தின் மூலம், ஒருவர் 18 வயது நிறைவடையும் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு, ஒரு வருடத்தில் நான்கு தேதிகளில்  பதிவு செய்ய  முகாம் நடைபெறும்.

வாக்காளர் பட்டியலில் நகல் உள்ளீடுகளை சரிபார்க்க வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பதால், தேர்தல் எப்போது நடைபெறும் மற்றும் வாக்காளர்களின் தொலைபேசி எண்களில் பூத் (விவரங்கள்) போன்ற கூடுதல் சேவைகளை நாங்கள் வழங்க முடியும். வாக்காளர் பட்டியலுடன் (வாக்காளர் ஐடி) ஆதார் இணைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை விரைவில் அரசால் வெளியிடப்படும். இது தொடர்பான வரைவு முன்மொழிவுகளை நாங்கள் ஏற்கனவே அனுப்பியுள்ளோம். ஆதார் விவரங்களைப் பகிர்வது தன்னார்வ விருப்பமாக இருக்கும். ஆனால் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை கொடுக்காததற்கு போதுமான தகுந்த காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து