முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசம் - இந்தியா இடையே மீண்டும் ரயில் சேவை துவக்கம்

வியாழக்கிழமை, 19 மே 2022      இந்தியா
Train-2022-05-19

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் 29-ஆம் தேதி முதல் தொடங்கும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. அந்நேரத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. 

தற்போது கொரோனா பரவல் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் குறைந்திருப்பதால், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் சேவையை மீண்டும் தொடங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, டாக்காவிலிருந்து கொல்கத்தா- டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ், வங்காளதேச ரயில்வே ரேக் மற்றும் கொல்கத்தா குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் ஆகியவை கொல்கத்தாவிலிருந்து இந்திய ரயில்வே ரேக் மூலம் வரும் 29-ம் தேதி மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து