முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை

திங்கட்கிழமை, 23 மே 2022      உலகம்
Saudi 2022-05-23

கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி அறிமுகத்திற்கு வந்த பிறகு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் மட்டும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி தொற்று விகிதம் கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து சவுதி அரேபிய மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், யேமன், சோமாலியா, எத்தியோப்ப்யா, காங்கோ குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மெனியா, பெலாரஸ், வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்தியாவில் இருந்து சவுதி செல்லும் மக்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை விதிக்கப்படவில்லை. மேலும் உலக நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை வைரஸ் குறித்து கண்காணித்து வருவதாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து அந்நாட்டு அரசு, ‘தற்போடு வரை குரங்கம்மை பரவல் மனிதர்களிடையே மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதனால் பெருந்தொற்றாக பரவும் வாய்ப்பு குறைவு. இருப்பினும் அதன் நிலைமை குறித்து கண்காணித்து வருகிறோம்’ என கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து