முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறைப்பணியில் சிறப்பான செயல்பாடுகளால் தமிழக அரசுக்கு பக்தர்கள் பாராட்டு: அமைச்சர் பி. கே.சேகர்பாபு தகவல்

சனிக்கிழமை, 4 ஜூன் 2022      ஆன்மிகம்
Sekarbapu 2022-06-04

இறைப்பணியில் சிறப்பான செயல்பாடுகளால் தமிழக அரசுக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்துவருவதாக அமைச்சர் பி. கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடவூர் அருள்மிகு அபிராமியம்மை உடனாகிய அமிர்தகடேசுவர சுவாமி திருக்கோயிலில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு  நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அமைச்சர் பேசும்போது தெரிவித்ததாவது, கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி திருக்கடையூர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதன்பிறகு தருமபுரம் ஆதீனத்திற்க்கு வருகை தந்து தொன்மை வாய்ந்த தொல்காப்பிய கல்வெட்டுகள் மற்றும் பதிவேடுகள் மற்றும் திருத்தேர்கள் மற்றும் இங்கு உள்ள பாடசாலைகள் மற்றும் பசுமடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டோம். இங்கு பாடசாலை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வியும் மற்றும் உயர்தர உண்டு, உறைவிடம் ஆகியவை அளிக்கப்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது. இக்கல்லூரியின் 25 ஆம் ஆண்டு, ஆண்டு விழாவிற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களும், ஐம்பதாம் ஆண்டு விழாவிற்கு இனமான காவலர் பேராசிரியர் அவர்களும் பங்கேற்றதாக இங்கு ஆதினம்  குறிப்பிட்டார்.

அதேபோல் இந்த ஆண்டு நடைபெற உள்ள 75ஆம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சியில்  தமிழ்நாடு  முதலமைச்சர்  பங்கேற்க வேண்டும் என்ற விருப்பத்தையும் ஆதீனம் தெரிவித்துள்ளார்கள். அதனை முறைப்படி  முதலமைச்சரிடம் தெரிவிப்பேன். இந்த அரசு ஆதீனங்களோடு சுமூகமான நிலையை கடைபிடித்து வருகிறது என்பது இது போன்ற நிகழ்வுகளின் வாயிலாக அனைவரும் அறிந்துள்ளார்கள்.

தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட 27 திருக்கோயில்களில் தற்போது பதினெட்டு திருக்கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு படிப்படியாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 1000 திருக்கோயில்களுக்கு ரூபாய் 1500 கோடி செலவில் திருக்குடமுழுக்கு நடத்த தமிழ்நாடு  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

முதல்வர் தலைமையிலான திமுக அரசின் , சிறப்பான இறைப்பணி செயல்பாடுகளால் பக்தர்கள் மனம் குளிர்ந்துள்ளனர். இதனால் தமிழக அரசை பெரிதும் பாராட்டியும் வருகின்றனர். திருக்கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்பு என்பதை நாங்கள் இரண்டு வகையாக பார்த்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து