முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்மையை உடைத்த உதயநிதி

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      சினிமா
Udayanidhi 2022 06 13

Source: provided

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான டான் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில், படத்தின் வெற்றிவிழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “டான் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். படம் வெற்றி பெற்றுவிட்டது என்பதால் நிறைய உண்மைகளைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். முதலில் நானும் இன்னும் மூவரும் படம் பார்த்தோம். இடைவேளைவரை பார்த்துவிட்டு உனக்கு சிரிப்பு வந்ததா, உனக்கு சிரிப்பு வந்ததா என மாறிமாறி கேட்டுக்கொண்டோம். ஆனால், இரண்டாம் பாதி பார்த்த பிறகு கடைசி ஒரு மணி நேரத்திற்காகவே இந்தப் படம் ஓடும் என்ற நம்பிக்கை வந்தது. அப்பா-பையன் செண்டிமெண்டிற்காக இந்தப் படம் நிச்சயம் ஓடும் என ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னேன். நாங்கள் நினைத்தது மாதிரியே தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியுள்ளார்கள்.  ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தக் கதையை சிபி எனக்குத்தான் முதலில் சொன்னார். இந்தக் கதை எனக்கு சொல்லப்பட்ட கதை என்பதையே நான் மறந்து விட்டேன். என் நண்பன் ஒருவன் சொன்ன பிறகுதான் நினைவுக்கு வந்தது. எனக்கு கதை பிடித்திருந்தாலும் பள்ளி காட்சிகள் என்னால் பண்ண முடியாது என்பதால் நான் நடிக்கவில்லை என்று கூறிவிட்டேன். நல்லவேளை நான் நடிக்கவில்லை. நிச்சயம் சிவகார்த்திகேயன் நடித்த மாதிரியெல்லாம் என்னால் நடித்திருக்க முடியாது. அப்பா- மகன் செண்டிமென்ட் எமோஷனெல்லாம் எனக்கு சுத்தமாக வந்திருக்காது. யார் யாரிடம் சென்று சேர வேண்டுமோ அவர்களிடம் இந்தப் படம் சென்று சேர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து