முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடசென்னை அனல் மின் நிலைய 3-வது நிலை டிசம்பர் இறுதியில் தொடங்கப்படும் : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      தமிழகம்
Senthil-Balaji 2022-06-19

Source: provided

சென்னை : வடசென்னை அனல் மின் நிலைய 3-வது நிலை டிசம்பர் இறுதியில் வணிக ரீதியாக தொடங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று அண்ணா சாலை மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள மின்னகம் மையத்தை நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

முதல்வரால் தமிழக மின் நுகர்வோர்களுடைய குறைகளை நீக்கக்கூடிய வகையில், புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் கடந்த 20.06.2021 அன்று தொடங்கப்பட்டது.

இந்த மின்னகம் மின் சேவை மையம் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.  பல்வேறு ஆய்வுப் பணிகளின் போதும், பயணத்தின் போதும் பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் என்னிடம் சொல்வது மின்னகம் ஒரு பயனுள்ளதாக சிறப்பாக அமைந்துள்ளது வரக்கூடிய ஆண்டுகளில் சிறப்பாக சேவைகளை செய்வதற்காக பல்வேறு முன்னேடுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

செயலி மூலமாக புகார்களை தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. காலி பணியிடங்கள் நிதிநிலைகேற்ப, தேவைகளுக்கேற்ப முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரப்பப்படும். வடசென்னை அனல் மின் நிலைய 3-வது நிலை கருணாந்தியால் 2010-ம் ஆண்டு 800 மெகாவாட் அளவிற்கு அனல் மின் நிலையத்தின் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டப்பணிகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு முழுவதுமாக நிறைவு செய்து டிசம்பர் மாத இறுதிக்குள் வணிக ரீதியாக தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து