முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சியை காப்பாற்றும் ஒருவருக்கு மற்றொருவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும் : மதுரையில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      தமிழகம்
Rajan-Sellapa 2022-06-19

Source: provided

மதுரை : மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மேற்கு(வ)ஒன்றிய கழகத்தின் சார்பில் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பனாங்காடியில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழக செயலாளர் வாசு என்ற பெரியணன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார் .இந்த கூட்டத்தில் மதுரை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆலோசனை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என். ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் அம்பலம், மாவட்ட கழக துணைச் செயலாளர் சசிகலா வேல்முருகன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் நிலையூர் முருகன், கார்சேரிணேசன், வெற்றிசெழியன், பகுதி கழக செயலாளர்கள் வண்டியூர் செந்தில்குமார், ஜீவானந்தம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம், மாவட்ட அணி நிர்வாகிகள் சண்முகப்பிரியா, முத்துகிருஷ்ணன், அன்புசெல்வம், மேலூர் அருண், துதி.திருநாவுக்கரசு, சேனாபதி, கார்த்திக், தினேஷ்குமார்,  முத்துகிருஷ்ணன் ,குண்டு கருப்பையா, செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இந்த கூட்டத்தில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 80 சகவீதம் நிறைவேற்றுவதாக கூறுகிறார் இப்படி கூறுவது பச்சைப் பொய் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும், பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம்என்றும், முதியோர் ஓய்வு தொகை 1,500 ரூபாய்யாக உயர்த்திகொடுக்கப்படும் என்றும், கேஸ் மானியம் நூறு ரூபாய் வழங்கப்படும் என்றும்,  மேகதாது பிரச்சினையில் தீர்வு காணப்படும் என்றும்,  முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 உயர்த்தி காட்டுவோம் என்றும், மாணவர்கள் கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று கூறினார்கள் இது போன்று எந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வந்த அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டு வீடுதோறும் மருத்துவம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள் அதற்கு கூட இத்தனை லட்சம் பேர் பயன்படுவதாக கணக்கும் கட்டினார்கள் ஆனால் திமுகவின் புள்ளிவிவரக் கணக்கு மக்களை ஏமாற்றும் மனக்கணக்காக தான் உள்ளது யார் வீட்டுக்கும் இந்த குழு வந்ததில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தற்போது உள்ள விதியின்  காரணமாக அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.விதியை மாற்றினால்தான் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என அ.தி.மு.க. தொண்டர்கள் நம்புகிறார்கள். ஒற்றை தலைமை என்ற விவாதம் எழுந்து உள்ளது. அதனால் அதற்கு முடிவு ஏற்பட பொது குழுவில் வாய்ப்புள்ளது. சட்டத்தில் மாறுதல் செய்வது தவறில்லை. சட்ட திருத்தம் செய்வது புதிதல்ல. கட்சியை கட்டிக் காப்பாற்றும் ஒருவருக்காக மற்றோருவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும். 

மாவட்டச் செயலாளர் 90 சதவீதம் பேர் ஒற்றை தலைமையை எதிர்பார்க்கின்றனர். நல்ல தலைமையை உருவாக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிளைக் கழகச் செயலாளர் தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றப் போகிறோம், அவர்கள் நல்ல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும். 2019 ஆம் ஆண்டே ஒற்றைத் தலைமையின் கீழ் வர வேண்டும் என தான் கூறினேன்.

மூன்று ஆண்டுகளாக இருவரின் தலைமையை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல் பட்டேன்.தற்போது பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுப்பதை ஏற்று ஒற்றுமையாக அனைவரும் செயல்பட வேண்டும். அது கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் சரி. நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாவட்ட  செயலாளர்கள் கூட்டம் அதிகார பூர்வமான கூட்டம் இல்லை. ஜானகி பெருந்தன்மையாக விட்டு கொடுத்தது போல் திறமையானவர்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து