முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 வருடங்களுக்கு பின்னர் தொடங்கிய ராமேஸ்வரம் - மதுரை ரெயில் சேவை

புதன்கிழமை, 22 ஜூன் 2022      தமிழகம்
train-2021-12-02

Source: provided

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம்-மதுரை இடையே பயணிகள் ரெயில் சேவை 2 வருடங்களுக்கு பின்னர் நேற்று தொடங்கியது. 

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு ரெயில்கள் வழக்கம் போல் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ராமேஸ்வரம்-மதுரை இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரெயில் நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

முதல் நாளான இன்று ராமேஸ்வரம் ரெயில் நிலையத்திலிருந்து நேற்று காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்ற மதுரை பயணிகள் ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தை கடந்து சென்றது. இதேபோல் மதுரையில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!